Saturday, 7 April 2012





வெற்றி !!! வெற்றி !!! வலை ஆரம்பித்து ஒரு நாள் கூட ஆகவில்லை இதுவரை பார்த்த ரசிக கண்மணிகளின் எண்ணிக்கை 100. இது அத்தனையும்எங்கள் இனமான சிங்கம் பவர் ஸ்டாரின் நட்சத்திர அந்தஸ்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி .மேலும் ஏராளமான காதல் கடிதங்கள் என்னுடைய ஜி மெயில் ல நிரப்பிட்டு வருது ,போலவே வாசகர் கடிதங்கள் திக்கு முக்காட வைக்குது.உதாரணதுக்கு கீழே ஒரு வாசகர் அனுப்பிய கடிதமும் ,அதற்க்கு பவர் ஸ்டாரின் பதிலும் ..,



அன்புள்ள பவரின் ரசிக பெருந்தகையே

வணக்கம் .கடந்த இரண்டுமாதங்களாக என்னக்கு பல்வேறு வகையில் மனசிக்கல் மற்றும் மலசிக்கல்.என்ன செய்வதென்றே தெரியவில்லை பல்வேறு வகையான இன்னலுக்கு உள்ளானேன் .உதாரணமாக நான் வேலை பார்க்கும் இடம் அண்ணா சாலை ,நான் இருக்கும் இடமோ மந்தைவெளி இதற்க்கு இடையில் பயண நேரம் சுமார் அரைமணி நேரம் .,இந்த நேரத்தில் கக்கா என்னக்கு வந்து விடுகிறது .வீட்டில் எவ்ளோ முயன்று பார்த்தும் முடியவில்லை .வேறு வழியின்றி பிரகலாத்து ஓட்டலில் ஒரு காபி ஆர்டர் செய்து விட்டு காலை கடனை ஓட்டலிலேயே முடித்து விடுகிறேன் .என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருந்த நான் இந்த ப்ளாகை படிக்க நேர்ந்த போது என்னை அறியாமல் கக்கா போய்விட்டேன் .அதிலும் உங்கள் லே அவுட் மிகச்சிறந்த நிவாரணி .

இப்படிக்கு

ஸ்ரீனிசுப்பிரமணி

அன்பு சுப்பிரமணி

வணக்கம் .உங்கள் கடிதம் கண்டு மகிழ்ச்சியுற்றேன் .மலச்சிக்கல் ,மனச்சிக்கல் ..,எல்லாவற்றையும் முறியடிக்கும் திறமை எங்கள் பவர் ஸ்டாருக்கு உண்டு .மேலும் ஆனந்த தொல்லை பட போஸ்டர் கலை பார்த்தால் கருங்குஷ்டம் குணமாகும் என்பதை சுகாதார துறை ஒரு ஆய் வரிக்கையில் தெரிவுதுள்ளது .நீங்கள் குணம் பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியே .மேலும் அந்த அந்த பிரகாலத் ஓட்டல் கழிவறையின் பெயரை '' பவர் ஸ்டார் கழிவறை ''என்று மாற்ற போராடுங்கள் .

இப்படிக்கு

கொசக்சி பசபுகழ்

Thursday, 5 April 2012

இன்று முதல் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகன் ,வரும்கால தொண்டன் வருங்கால அமைச்சர் -கொசக்சி பசபுகழ் ,தலைவரின் பாராயணம் போராயணம்,காதல் காவியம்,எல்லாம் இவ்வலையில் ஏற்றப்படும் என்பதை வாக்காள பெருமக்களாகிய வலையுலக தோழர்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன் மேலும் எங்கள் தலைவரே பல மனங்களை வென்றெடுத்த திரட்டி என்பதால் தமிழ்திரட்டியில் இணைக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.


      வெளியே போ 



எச்சரிக்கை : தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ,சொம்பு விஜய் ,அஜித் ,ரஜினி ,கமல் ரசிகர்களுக்கு தயவு வெளில போய்டுங்க !!மீறினால் அவர்களின் ஐ .பி முகவரி கண்டுபிடித்து லத்திகா டி வி டி ..,பார்சல் செய்ய படும் என்பதை கொடூரமாக ,ஆக்ரோஷமாக சொல்லி பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன் .
                                                     தலைவர்வாழ்க!!


ஆனந்த தொல்லை தொடரும்...........,